நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ''இன்றைய நாள் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள். என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் இது. இந்தத் திரைப்படத்தில் அற்புதமான ஒரு வேடம் கிடைத்திருக்கிறது அதில் திறமையாக நடித்திருக்கிறேன். இதனால் எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் இதனை குறிப்பிடவில்லை. இது என் குடும்பம். என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த வழிகாட்டி தியாகராஜன் சார். இன்றும் அவரை நான் நேசிக்கிறேன்.
பிரசாந்த் எனக்கு புதியவரல்ல. நான் 90களில் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மீது எனக்கு கிரஷ் இருந்தது. என்னுடைய முதல் டீன் ஏஜ் கிரஷ் பிரசாந்த் தான்.
அவருடன் கடந்த சில வருடங்களாக பழகும் போது அன்பான நட்பு கிடைத்தது. அந்த நட்பு அழகானது. மதிப்பு வாய்ந்தது. பிரசாந்த் சிறந்த மனிதர். அவரை நினைத்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். அவருடைய நேர்மை , பெருந்தன்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு என எல்லாமே அவருடைய தந்தையிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும், 'இவர் (தியாகராஜன்) போன்ற ஒரு அப்பா இருந்தால் அதுவே போதும் ' என்பார்.
இந்த திரைப்படம் தரமான படைப்பு. அருமையான நட்சத்திர கலைஞர்கள், திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. இந்தப் படைப்பை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. ஏனென்றால் இந்த திரைப்படம் அதுவாகவே விளம்பரத்தை தேடிக் கொள்ளும். ரசிகர்களிடம் இந்தத் திரைப்படம் எளிதாக தானாகவே சென்றடையும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.
ஒரு ரசிகையாக இந்தியில் வெளியான அந்தாதுன் திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த படத்தின் வேற்று மொழி ரீமேக்கையும் பார்த்திருக்கிறேன். ஆனால் தியாகராஜன் சார் தமிழில் மிகப் பெரும் நட்சத்திர பலத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் பணிகளை நிறைவு செய்தவுடன் தியாகராஜன் சார் அன்றைய சம்பளத்தை அன்றே கொடுத்து விடுவார். படத்திற்கு பின்னணி பேசும் போது இரண்டு மடங்கு சம்பளத்தை கொடுத்தார். அவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக கொடுக்கவில்லை. ஒரு நட்சத்திரத்தின் மதிப்பை அறிந்து அதனை கவுரவப்படுத்தும் விதமாக அது இருந்தது.
நான் ஒரு பயணத்தின் போது என்னுடைய செல்போனை தொலைத்து விட்டேன். அப்போது தியாகராஜன் சார் தொடர்பு கொண்டார். நான் பதட்டத்தில் இருப்பதை உணர்ந்து, உடனடியாக நீ எங்கு இருக்கிறாய் என கேட்டார். உடனடியாக எனக்கு ஒரு விலை உயர்ந்த செல்போனை பரிசாக அளித்தார், அதுதான் தியாகராஜன் சார்.
"நான் விஜய்யுடன் நடிக்கும்போது நீ தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சொன்னேன். அவர் அப்போது நம்பவில்லை. அவர் இன்று இருக்கும் என அவருக்கு தெரியும். விஜய் தற்போது அரசியலுக்கு சென்றுவிட்டார். அந்த இடத்திற்கு பிரஷாந்த் வருவார்.
0 Comments