Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

40 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான்...!


பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அர்ஷத் நதீம் அனைவரையும் வியக்க வைத்தார்.

இதன்மூலம் முந்தைய ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்த அவர், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் தடகள வீரர் என்ற பெருமையையும் அர்ஷத் நதீம் பெற்றார்.

1984 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்களம் என என மொத்தமாக 11 பதக்கங்களை வென்றுள்ளது பாஸ்கிதான்.

கடைசியாக 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்சில்தான் பாகிஸ்தான் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments