நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், மனோபாலா, யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் இன்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டது. அதன் பின்னர் படக்குழு தரப்பில் இருந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ரிலீஸான அந்தகன் படத்தினை படத்தின் நடிகர் பிரசாந்த் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். படம் பார்க்க வந்த ரசிகர்கள் அந்தகன் படத்தின் பேனருக்கு பாலாபிசேகம் செய்தனர். அதேபோல், 1000 வாலா வெடியை வெடித்தும் ட்ரம்ஸ் வாசித்தும் ரசிகர்கள் உற்சாகமாக படத்தினை ரசிகர்கள் வரவேற்றனர்.
படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலர் படம் குறித்த தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். படம் பார்த்த ரசிகர் ஒருவர், ' துவண்டு போய்க்கிடந்த தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வந்துவிட்டான்டா அந்தகன்" என பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர், ' படத்தின் முதல் பாதியைப் பார்த்துவிட்டேன். படம் சூப்பராக உள்ளது. பிரசாந்த் சார் நீங்கள் சிறப்பாக நடித்துள்ளீர்கள். காமெடி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதேபோல் சிம்ரனும் சிறப்பாகவே நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியின் காமெடியும் நல்லாவே உள்ளது. இரண்டாம் பாதி படத்திற்காக வெயிட்டிங்' என பதிவிட்டுள்ளார்.
சிம்ரன் வில்லத்தனம்: அதேபோல் மற்றொரு ரசிகர், " அந்தகன் படத்தின் இடைவெளி காட்சி சிறப்பாக உள்ளது. பிரசாந்த் அருமையாக நடித்துள்ளார். சிம்ரனின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டுகின்றது. இரண்டாம் பாதி படத்திற்காக வெயிட்டிங்' என பதிவிட்டுள்ளார். அந்கன் படம் ரசிகர்கள் மத்தியில் மெரிட்டில் பாஸ் ஆகும். சிறந்த ரீமேக் படமாக இது அமைந்துள்ளது. வாழ்த்துகள் பிரசாந்த் சார் என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
இசை பலம்: வேறொரு ரசிகர், அந்தகன் படம் ப்ளாக் காமெடி க்ரைம் த்ரில்லர் படம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் படத்திற்கு பெரிய போனஸாக சந்தோஷ் நாராயணனின் இசை அமைந்துள்ளது. அந்தகன் ப்ளாக் பஸ்டர். பிரசாந்த் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் சிம்ரனின் வில்லனிசம் மிரட்டுகின்றது. படத்தின் முதல் பாதி சூப்பர் என ஒருவருர் பதிவிட்டுள்ளார்.
0 Comments