நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது கேஜிஎஃப் சாப்டர் 1. இந்தப் படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில், சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது இந்தப்படம்.
இந்தப் படத்தின் தொடர்ச்சியாக கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது கேஜிஎஃப் 2 படம். இந்த இரு படங்களிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் யஷ். ஆக்ஷன் படத்திற்கான நெறிமுறையை இந்தப் படம் இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தது. முதல் பாகத்தைவிட அதிகமாக ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்தது.
கேஜிஎஃப் படங்கள்: நடிகர் யஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் ஒன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஆக்ஷன் படங்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. பிரசாந்த் நீல் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் சிறப்பாக அமைத்திருந்தார். ரசிகர்களுக்கு மிகவும் விருந்தாக இந்த படம் அமைந்த நிலையில் இதன் இரண்டாவது பாகம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி முதல் பாகத்தை காட்டிலும் மிக அதிகமான வரவேற்பையும் வசூலையும் குவித்தது.
தேசிய விருது வென்ற கேஜிஎஃப் 2 படம்: தற்போது 2022ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேஜிஎஃப் சாப்டர் 2 படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சலார் படத்தை இயக்கியிருந்தார் பிரஷாந்த் நீல். இதனிடையே தற்போது ஜூனியர் என்டிஆர் உடன் அவரது என்டிஆர்31 படத்திற்காக இணைந்துள்ளார் பிரஷாந்த் நீல். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் ஏகே64 படத்தையும் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேஜிஎஃப் 3 படத்தின் சூட்டிங்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக கேஜிஎஃப் 3 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் படங்களின் இரண்டு பாகங்களையும் ஹம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருந்த நிலையில் மூன்றாவது பாகத்தையும் ஹம்பாலே நிறுவனமே தயாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது காந்தாரா சாப்டர் 1 படத்தை ஹம்பாலே நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் 30 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்சிக் படத்தில் யஷ்: தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் என்ற படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து யஷ் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகிவரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. யஷ்ஷின் 19வது படமாக டாக்சிக் உருவாகி வருகிறது. இதனிடையே அவரது 20வது படமாக திட்டமிடப்பட்டுள்ள கேஜிஎஃப் 3 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 Comments