காலை 7 மணிக்கு ஆரம்பமாகியிருக்கும் வாக்களிப்பு மாலை 4 மணி வரையில் நடைபெறவுள்ளது.
வாக்காளர்கள் அவர்களுக்குரிய ஆவணங்களை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு சென்று கொடுக்கப்பட்டுள்ள உரிய நேரத்துக்குள் வாக்குகளை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை, இம்முறை 1 கோடியே 71 இலட்சத்து 40ஆயிரத்து 352 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாலை 4மணிக்கு வாக்களிப்புகள் நிறைவடைந்ததும் வாக்குகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
0 Comments