Trending

6/recent/ticker-posts

Live Radio

சிறையில் மலர்ந்த காதல்...!





இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சிறையில் ஏற்பட்ட காதலால் பிணையில் வெளிவந்து திருமணம் செய்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ‘டேட்டிங்’ செயலி மூலம் பழகி துஷ்யந்த் சர்மா(27) என்பவரைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் பிரியா சேத் (34) என்ற பெண்ணும், அல்வார் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் அனுமார் பிரசாத் (29) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் 2023ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திறந்தவெளிச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து பிணை கோரி விண்ணப்பித்தனர்.

ராஜஸ்தான் மேல்நீதிமன்ற உத்தரவின்படி இவர்களுக்கு 15 நாட்கள் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த இருவரும், திருமணம் செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments