லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வை குறி வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லாஹ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைதொடர்ந்து ஈரான் நாட்டின் தேசிய தலைவர் அயதுல்லா அல் கமெனி, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவர்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழித்தாக்குதலில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தரைவழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
0 Comments