Trending

6/recent/ticker-posts

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…!


தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நேபாள தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக தங்களின் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களையும், தொலைதூர பகுதியில் வெள்ளத்தினால் சிக்குண்டுள்ளவர்களையும் மீட்பதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கூரைகளின் மேல் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்பதற்கு ஹெலிக்கொப்டர்களையும் படகுகளையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர்.

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளும் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments