திரைப்பிரபலங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்திருக்கிறது. இதனையொட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சித்தார்த். 'கன்னத்தின் முத்தமிட்டாள்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தந்து வாழ்க்கையை துவங்கியவர் நடிகர் சித்தார்த் தொடந்து பாய்ஸ், ஆயுத எழுத்து, 180, தீயாவேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, கவியத்தலைவன், சிவப்பு மஞ்சள் பச்சை, சித்தா என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் நடிகை அதிதி ராவுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது முதல் இருவரும் காதலித்து வந்தனர். அதன்பிறகு லிவிங் டு கெதரில் ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். அனைத்து விழாக்களிலும் இருவரும் ஒன்றாகவே பங்கேற்று வந்தனர். அதேபோல் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்திலும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் இருவரும் வெளிப்படையாகக் காதலை அறிவிக்கவில்லை. இதனிடையே கடந்த மார்ச் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றதாக புகைப்படங்களை பகிந்திருந்தனர்.
அதன்பிறகு திருமணம் குறித்த தகவலுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், திருமணம் குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது. இதனிடையே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் இரண்டு குடும்பத்தினர் சூழ நடந்து முடிந்திருக்கிறது. இதன் புகைப்படங்களை இருவருமே கூட்டாக அவர்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
0 Comments