களுத்துறை, மிஹிகதவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை மிஹிகடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 35 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, மிஹிகதவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உப பொலிஸ் பரிசோதகர் பீ.ஆர்.வீரசேன உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டை சோதனையிட்ட போது கட்டில் மெத்தையின் கீழ் 10 வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments