பொதுத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தவிர, 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மொத்தம் 46 பேரின் வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதுடன், அதன் எண்ணிக்கை 64 ஆகும்.
0 Comments