உலகளாவிய ரீதியில் பெரும்பான்மையான நாடுகளில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினம் உருவாகுவதற்கும் ஒரு வரலாறு உள்ளது. 1966ம் ஆண்டு யுனெஸ்கோவினால் ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு கற்பித்தல் கற்றல் தரநிலைகள் பற்றிய அளவுகோல்களை அமைக்க இது வழிவகுத்தது.
1994ம் ஆண்டு முதல் ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. பல நாடுகளில் ஒக்டோபர் 5ம் திகதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டாலும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 6ம் திகதியே ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
‘கல்விக்கான புதிய சமூக ஒப்பந்தத்தை நோக்கி ஆசிரியர் குரல்களுக்கு மதிப்பளித்தல்’ எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து உலகளவில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதென யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
நூற்றுக்கும் அதிகமான நாடுகள் ஆசிரியர் தினத்தை கொண்டாடுகின்றன. ஆசிரியர்களின் திறமைகள், ஆற்றல்கள், உரிமைகள் மற்றும் அவர்களுக்கான முன்னுரிமைகள் குறித்தும் இந்த நாளில் வலியுறுத்தப்படுகின்றன.
சமூகத்தில் ஆசிரியர்கள் என்ற ஒரு தரப்பு இல்லையென்றால், எதிர்கால சமூகத்தின் அறிவு மற்றும் திறன் என்பது கேள்விக்குறியாகும். அந்த வகையில் ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் வளப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
குறைந்த எதிர்பார்ப்புகளுடன் மாணவர்களுக்கு கல்வியறியை வழங்கும் ஆசிரியர் தொழில் போற்றத்தக்கது. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களும் தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது.
அவர்களின் உரிமைக் குரல் சில சந்தரப்பங்களில் முடக்கப்படுவதே இதற்கு காரணமாகும். ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களின் சுதந்திரமான வாழ்க்கை போக்கு, வளமான மாணவர் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க வழிவகுக்கும்.
கற்பித்தலுக்கென தாம் பெறும் வெகுமானத்தையும் கடந்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய பல ஆசிரியர்கள் எம்மத்தியில் உள்ளனர். இன்றும் அவ்வாறான ஆசிரியர்கள் இந்த உலகில் இருப்பதை காண முடிகின்றது. அவர்கள் அனைவருக்கும் ஐ.டி.என் டிஜிட்டல் பிரிவு சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
இந்த இனிய தினத்தில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் ஸ்டார் வானொலியின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்…💐💐
0 Comments