இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாகவே கூறப்பட்டது. இதற்கிடையே திடீர் திருப்பமாக இப்போது சின்வார் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான தாக்குதல்கள் இப்போது தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இது மிக முக்கிய திருப்பமாகப் பார்க்கப்பட்டது. ஹமாஸ் தலைவரே கொல்லப்பட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றெல்லாம் சொன்னார்கள்.
இதற்கிடையே இப்போது திடீர் திருப்பமாக ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கட்டார் அரசை இரகசியமாக தொடர்பு கொண்டு உதவிகளைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. காசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலஸ்தீனியர்கள் தங்கிய பாடசாலை இஸ்ரேல் தாக்கியது. அந்த ராக்கெட் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது அதற்கு நேர்மாறான தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் சின்வார் நேரடி தொடர்பு கொண்டதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று மூத்த கட்டார் தூதர் தெரிவித்துள்ளார். ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான நபரான கலீல் அல்-ஹயா என்பவரே தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த செப். 21ம் திகதி காசாவில் நடந்த தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஏனென்றால் அந்த தாக்குதலுக்குப் பிறகு அவர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அன்றைய தினம் ஹமாஸ் மையத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
ஆனால், பாடசாலையில் தாக்குதல் நடந்ததாகவும் அதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாகப் பலஸ்தீனம் கூறுகிறது.
0 Comments