Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தொடர் தோல்வியினாள் - பதவி விலகும் டிம் சவுத்தி…!


இலங்கை அணியிடம் தொடர் தோல்வியை சந்தித்ததையடுத்து, நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து டிம் சவுத்தி விலகியுள்ளார்.

2022ம் ஆண்டில், கேன் வில்லியம்சனுக்கு பின்னர் டெஸ்ட் அணியின் தலைவராக டிம் சவுத்தி நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் 14 டெஸ்ட் போட்டிகளில் 6 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் நியூசிலாந்து அணி சந்தித்துள்ளது.

அத்துடன், 2 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

இந்தநிலையில், அண்மையில் காலியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணி இந்த மாத இறுதியில் இந்திய அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்தநிலையில், நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டொம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் 9 போட்டிகளில் நியூசிலாந்து டெஸ்ட் அணிக்குத் தலைவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments