Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஹரீஸின் வெற்றியை உறுதிப்படுத்த ஏராளமான இளைஞர்கள் என தகவல்…!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம் ஹரீஸூக்கும் கல்முனை தொகுதி இளைஞர்களுக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.

சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஆரம்பித்த முதலே எண்ணிலடங்காத இளைஞர்கள் ஒன்று திரண்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் காரியாலயத்தில் இருந்து கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்திற்கு நடைபவணியாக இளைஞர்கள் புடைசூழ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அழைத்துவரப்பட்டு சந்திப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமகால அரசியல் சூழ்நிலை குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் இங்கு இளைஞர்களுக்கு விளக்கமளித்தார். இதன்போது கல்முனையின் இருப்பு , கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் இளைஞர்களுக்கு விளக்கமளித்தார்.

சந்திப்பின் இறுதியில் முன்னாள் எம்பி ஹரீஸின் வெற்றியை உறுதிப்படுத்தி மீண்டும் அவரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான அரசியல் களத்தில் ஈடுபடுவதென ஏகோபித்த தீர்மானத்தை இளைஞர்கள் எடுத்தனர். இந்த சந்திப்பில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


நூருல் ஹுதா உமர்

Post a Comment

0 Comments