Trending

6/recent/ticker-posts

Live Radio

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்...!



தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது சனநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் முதன்முறையாக ஜோசப் விஜய் இன்று கரூர் செல்கிறார்.

இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் கரூர் மாவட்ட பொதுக்கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு விழாவில், பாதுகாப்பு காரணங்களுக்காக மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விதித்துள்ளார்.

அதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையைத் தாண்டி யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தகுதியுள்ளவர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டுவைத்திருப்பவர்கள் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்குள் நுழைய முடியும். இந்தச் சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கரூரில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு அரச பணி வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments