Trending

6/recent/ticker-posts

Live Radio

பில்லியன் டொலர் பண மோசடி – 4 வங்கி முகாமையாளர்களுக்கும் விளக்கமறியல்...!



சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நான்கு பிரதான தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Post a Comment

0 Comments