Trending

6/recent/ticker-posts

Live Radio

இந்தோனேசியாவில் படகில் தீ விபத்து : பெண்ணொருவர் உயிரிழப்பு, 172 பேர் மீட்பு...!



இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தீவான பாலியில் இருந்து லோம்போக் தீவை நோக்கிச் சென்ற பயணிகள் படகு ஒன்றில் இன்று (12) புதன்கிழமை திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 172 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்படைக் கப்பல் மற்றும் அருகிலிருந்த பிற படகுகள் மூலம் இரண்டு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 172 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

19 வயதுடைய இந்தோனேசியப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் லோம்போக் தீவின் 'லெம்பார்' கடற்கரைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் தீ பரவியதும் பயணிகள் உயிர்காக்கும் உடைகளை அணிந்துகொண்டு கடலில் குதித்ததாகவும், சில மணிநேரங்களுக்குப் பின்னரே மீட்புக் உதவிகள் கிடைத்தன எனவும் தப்பிய பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் போதிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததாலும், மோசமான வானிலையாலும் இவ்வாறான படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

கடந்த வாரம் ஜாவா தீவு அருகே பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மாதம் சுலாவேசி அருகே 70 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு மூழ்கியதில் 4 உடல்கள் மீட்கப்பட்டதுடன், 14 பேர் காணாமல் போயிருந்தனர்.

Post a Comment

0 Comments