Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: Ebola அச்சுறுத்தல்: இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு...!



நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்

அத்துடன், வட மாகாணம், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments