Trending

6/recent/ticker-posts

Live Radio

கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு...!



பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு தழுவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த எட்டு வருடங்களாக மாற்றமின்றி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், இந்த நிலையை சீர்செய்யும் வகையில் 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், இந்த தீர்மானம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானம் இழுத்தடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, இரண்டு நாட்களுக்கு நோய் விடுப்புப் பதிவு செய்து நாடு தழுவிய ரீதியில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments