Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



2 இலட்சத்து 64ஆயிரம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லையா.?


விவசாய ஓய்வூதியம் பெற வேண்டிய 60 வயது நிரம்பிய 2 இலட்சத்து 64ஆயிரத்து 227 விவசாயிகளுக்கு விவசாய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு அறிக்கையின்படி, விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 8 இலட்சத்து 71ஆயிரத்து,425 விவசாயிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 31, 2023ஆம் ஆண்டின் நிலவரப்படி, 61 முதல் 93 வயதுடைய விவசாயிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 803 ஆகும்.

இருப்பினும் 2 இலட்சத்து 64 ஆயிரத்து 227 விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், 60 வயது நிறைவடைந்தும் ஓய்வூதியம் பெறுவதற்காக விண்ணப்பங்களை அனுப்பாத ஓய்வூதியதாரர்களை கண்டறிய அனைத்து மாவட்ட மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் உதவிப் பணிப்பாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 12 மாவட்ட அலுவலகங்களின் அறிக்கையை சரிபார்த்தபோது, ​​அதில் 06 மாவட்ட அலுவலகங்கள் எழுத்துமூல அறிவிப்பின்படி செயல்படவில்லை.

60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியத்தை பெறவேண்டிய விவசாயிகளை அடையாளம் காண தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கணக்காய்வு அலுவலfம் பரிந்துரை செய்துள்ளது.

Post a Comment

0 Comments