Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கடந்த 4 மணி வரையிலான வாக்களிப்பு வீதம்…!


தேர்தலில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் இதுவரை பதிவாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சில மாவட்டங்களில் அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றன. வன்னி தேர்தல் மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும், மாத்தறை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், மாத்தளை மாவட்டத்தில் 72 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 68 சதவீத வாக்குகளும், கேகாலை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 60 சதவீக வாக்குகளும் பதிவாகியுள்ளன. அனுராதபுரம் மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 சதவீத வாக்குகளும் திருகோணமலை மாவட்டத்தில் 67 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் 64 சதவீதமும், புத்தளம் மாவட்டத்தில் 56 சதவீதமும், பொலன்னறுவை மாவட்டத்தில் 65 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

Post a Comment

0 Comments