குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான சஞ்சய் போலாரா 12 ஆண்டுகளாக ஒரே காரை பயன்படுத்தி வந்துள்ளார். கார் பழையதான போதிலும் ராசியான கார் என கருதி அதை தொடர்ந்து பழுது பார்த்து தன்னுடன் வைத்துள்ளார். இந்த நிலையில், அந்த காரை மற்றொருவருக்கு விற்பனை செய்ய மனமில்லாத அவர் அந்த காரை நல்லடக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.
தனது வாழ்க்கையில் பல நல்வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் இந்த கார் தந்ததாக கருதி அதனை, 1500-பேர் முன்னிலையில் தனது விவசாய நிலத்தில் நல்லடக்கம் செய்துள்ளார். இந்த நிகழ்வுகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மனிதர்களை நல்லடக்கம் செய்வது போல் தொழிலதிபர் காரை நல்லடக்கம் செய்தது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
0 Comments