Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



விஜய், ரஜினியின் படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த 'அமரன்'



சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார் - ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, 'புக் மை ஷோ' செயலில் அமரன் படத்திற்கான டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்கப்பட்டுள்ளன. இதுவரை 4.55 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், விஜய்யின் 'தி கோட்' படத்தின் டிக்கெட்டுகள் 4.5 மில்லியனும், ரஜினியின் 'வேட்டையன்' படத்தின் டிக்கெட்டுகள் 2.7 மில்லியனும் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக 'அமரன்' புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments