தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பணியிடங்களில் தங்கியிருக்க வேண்டும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் விடுமுறையில் இருக்கும் உத்தியோகத்தர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments