Trending

6/recent/ticker-posts

Live Radio

ட்ரம்ப் அரசின் அதிரடி உத்தரவு...!



அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களாக இருப்பவர்கள், இனிவரும் காலங்களில் அரசு உதவிபெறும் வணிகக் கடன்களைப் பெற முடியாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்கா முதன்மை (யுஅநசiஉய குசைளவ) பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் நேரடி அல்லது மறைமுக உரிமையாளர்கள் அனைவரும் 100 சதவீதம் அமெரிக்கக் குடிமக்களாகவோ அல்லது அமெரிக்கத் தேசியவாதிகளாகவோ இருக்க வேண்டும்.

இதற்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் 5 வீதம் வரை வெளிநாட்டினர் அல்லது கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் பங்கு வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த விதிவிலக்கு தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் இனி அரசு வழங்கும் மானியங்கள் அல்லது சலுகை அடிப்படையிலான வணிகக் கடன்களைப் பெற முடியாது.

அமெரிக்காவின் இந்த முடிவினால் அதிக பாதிப்பைச் சந்திக்கப்போகும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது.

2024 நிதியாண்டின் தரவுகளின்படி, கிரீன் கார்ட் பெற்றவர்களில் இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.

2025 ஜூன் மாத புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் உள்ள சிறுதொழில் உரிமையாளர்களில் 40 வீதம் பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.

இந்த அறிவிப்பு அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்த சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்து வரும் சிறுதொழில் முனைவோரின் வளர்ச்சியை இந்த நடவடிக்கை முடக்கும் என அஞ்சப்படுகிறது.

Post a Comment

0 Comments