Trending

6/recent/ticker-posts

Live Radio

வடமேல் மாகாண ஆளுநர் பங்கேற்புடன் உலகளாவிய முதல் திரையிடல்இலங்கை குருநாகலையில்.




Star Fm மற்றும் இலங்கை தமிழோசை ஏற்பாட்டில் வடமேல் மாகாண ஆளுநர் பங்கேற்புடன் உலகளாவிய முதல் திரையிடல்இலங்கை குருநாகலையில்.


நமது இளைய சமூகத்தின் வாழ்வியலையும்பாரம்பரியத்தையும் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளஇலங்கைதென்னிந்திய பிரபல இளம் திரைப்பட இயக்குனர் TK.யுவன் இயக்கத்தில் உருவான இலங்கைதமிழ் திரைப்படமான  பைனல் எஸ்கெப் திரைப்படத்தின் உலகளாவிய முதல் திரையிடல்  26 .07. 2026 நாளை பிற் பகல் 2.30  மணிக்கு குருநாகல் மாகாண சபை கேட்ப்போர் கூட உள்ளக அரங்கில் (Provincial Council Auditorium ) நடைபெறவுள்ளது.


இத்திரைப்படம் சிறந்த கதைக் களத்தினை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள  நிலையில்அதன் உலகளாவியமுதல் திரையிடல் இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்நிகழ்வில் கௌரவ வடமேல் மாகாண ஆளுனர் திஸ்ஸ குமார ஸ்ரீ வர்னசூரிய அவர்கள் பிரதம அதிதியாககலந்துகொண்டு முதல் திரையிடலை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன்திரைப்படத்தின் இயக்குநரும்கலந்துகொள்ளவுள்ளார்.


இந்த முதல் திரையிடலுக்கான நுழைவு முற்றிலும் இலவசமாக அனைத்து மக்களும் உங்கள் குடும்பத்தோடுஇணைந்து மகிழ்ச்சியாக வந்து பார்வை இட  முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


அத்துடன் ஊடகத் துறையில் நீண்ட காலம் சேவையாற்றி வருகின்ற இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களும் இதன் போது ஆளுநர் அவர்களால் விருது வழங்கி கெளரவிக்கப் பட உள்ளனர்.


இன் நிகழ்வில் குருநாகல் மல்லவபிட்டியவை சேர்ந்த மாணவி மெஹனாஸ் றியாஸ் அவர்களின் வாணிஷ் ஒப் த ரேஷ் ஆங்கில நாவலும் வெளியிட்டு வைக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments