இதன்படி, பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் அந்ததந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் தபால் மூலம் அவர்களது தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி முதல் www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின் அனைத்து விண்ணப்பதாரர்களும் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தின் மூலம் அந்த திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments