Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து தொடர்பில் மகன் அமீன் கூறியது என்ன?



இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி சாயிராவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

அதுமட்டுமல்லாது ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்திற்கு பிறகு அவரது இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டே என்பவரும் கணவரைப் பிரிவதாக அறிவித்தார்.

இந்த செய்தி வைரலான பிறகு ரஹ்மான் விவாகரத்துக்கு அந்த பெண் தான் காரணமா என இணையத்தில் பல சர்ச்சையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த பெண்ணுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என சாயிராவின் வக்கீல் விளக்கம் கொடுத்தார்.

இதற்கு பல சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலே பரப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இன்ஸ்டாக்ராமில் இந்த சர்ச்சைகளுக்கு கொடுத்துள்ளார். பதிலடி

அவரது பதிவில், என் அப்பா ஒரு லெஜெண்ட், திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்களால் மட்டுமல்ல, அவர் பல வருடங்களாக சேர்த்து வைத்த மரியாதை, மதிப்பு மற்றும் அன்பு தான் காரணம்.

அவரைப் பற்றி பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதைப் பார்க்கும்போது மனமுடைகிறது.

ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும், அவரின் கண்ணியத்தை மதித்து அதனைக் காக்க வேண்டும்.

அத்தோடு எல்லா புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.அமீன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments