Trending

6/recent/ticker-posts

Live Radio

பொத்துவிலில் ஒரு நபரை இழுத்துச் சென்ற முதலை…!



பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று 28ம் திகதி மாலை முதலை பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் இருந்து எருமை மாடுகளை கரைக்கு கொண்டுவரும் போது குறித்த நபரை முதலை பிடித்து இழுத்து செல்லப்பட்டதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பசரச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இந்த சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளார்.

காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிசார் மற்றும் பானம கடற்படை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments