அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் சுமார் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் கடந்த 28-ந் தேதி வெளியானது. டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு....என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டீசர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விடா முயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.Fuelled by determination, powered by strength! ⚡️ The VIDAAMUYARCHI teaser crosses 1️⃣0️⃣ Million views with relentless effort. 🔥
— Lyca Productions (@LycaProductions) December 1, 2024
🔗 https://t.co/ptOYpJ2LQW#Vidaamuyarchi In Cinemas worldwide from PONGAL 2025!#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran… pic.twitter.com/qpsGILIIPj
இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் 10 மில்லியன் (1கோடி) பார்வைகளை கடந்து, தற்போது யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இதுகுறித்த பதிவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
0 Comments