Trending

6/recent/ticker-posts

Live Radio

ஞானசார தேரருக்கு பிடியாணை...!!



இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (19) நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாதுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன் ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments