Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



விமானம் விழுந்து நொருங்குவதற்கு முன்னர் ஏதோ மோதியது போன்ற பாரிய சத்தங்கள் கேட்டன - பயணித்தவர்கள்...!



அஜர்பைஜான் எயர்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் குரொஸ்னியை நெருங்கிக்கொண்டிருந்தவேளை ஏதோ மோதியது போன்ற ஒரு பாரிய சத்தத்தை கேட்டதாக விமானவிபத்தில் உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டுபயணிகளும் ஒரு விமானப்பணியாளரும் ரொய்ட்டருக்கு இதனை தெரிவித்துள்ளனர்.

அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டாவு நகரில் தீப்பிடித்து எரிந்து விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானம் ரஸ்யாவின் தென்பகுதிக்கு அருகில் சென்ற பின்னர் தனது பயணப்பாதையை மாற்றியது.

தென்ரஸ்யாவிலேயே உக்ரைனின் ஆளில்லா விமானங்களிற்கு எதிராக ரஸ்யா அதிகளவில் விமான எதிர்ப்பு தாக்குதல்களை மேற்கொண்டுவந்துள்ளது.

பாரிய சத்தத்தின் பின்னர் விமானம் விழப்போகின்றது என நான் நினைக்கின்றேன் என மருத்துவமனையிலிருந்த படி பயணிகளில் ஒருவரான சுபோன்குல் ரகிமோவ் தெரிவித்துள்ளார்.

பாரிய சத்தத்தை கேட்டவுடன் பிரார்த்தனையில் ஈடுபடதொடங்கினேன் என தெரிவித்துள்ள அவர் விமானம் ஏதோஒருவகையில் சேதமாக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை அது முன்னைய விமானமாகயிருந்தது மது அருந்திய விமானம்போலயிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

நானும் பாரிய சத்தத்தை கேட்டேன் என மற்றுமொரு பயணியும் தெரிவித்துள்ளார்.

நான் மிகவும் அச்சமடைந்தேன்,என வபா ஷபனோவா ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.இரண்டாவது சத்தமும் கேட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments