Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



டிக்டொக் செயலியைக் கைப்பற்றுகிறது மைக்ரோசொப்ட்...!



அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 17 கோடி பேர் டிக்டொக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும், டிக்டொக் செயலியின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் டிக்டாக் நிறுவன பங்கில் சுமார் 50 சதவீதம் அமெரிக்கர்கள் வசம் இருக்க வேண்டியது அவசியம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் டிக்டொக் செயலியைப் கைப்பற்றிக் கொள்வதற்கு பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், அந்நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிடுவதைக் காண, தான் ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் இது குறித்து டிக்டொக் மற்றும் மைக்ரோசாப்ட் தரப்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments