Trending

6/recent/ticker-posts

Live Radio

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம்...!


சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் நேற்று (29) பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

பாதுகாப்புப் புகலிடமாக முதலீட்டாளர்கள் தங்கத்தைத் தெரிவு செய்வதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 69.77 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நாணயச் சந்தையில் டொலரின் மதிப்பு அதிகரித்து வருவது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பங்குச் சந்தைகளில் நிலவும் தளம்பல் நிலையால், முதலீட்டாளர்கள் தங்களின் சொத்துக்களைப் பாதுகாக்கத் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

எனினும், சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments