Trending

6/recent/ticker-posts

Live Radio

இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு யோஷித...!



யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

அத்துடன் அந்த காணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி கடந்த வெள்ளிக்கிழமை குறித்த குழுவில் முன்னிலையாகி அவர் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments