Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நாட்டில் அதிகளவானோர் வெளிநாடு சென்றுள்ளார்கள்...!



வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய , 2024ம்ஆண்டில் 312,836 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அதில் 185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும்,கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments