Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா காலமானார்...!



சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு இயற்கை எய்தியுள்ளார்.

குளியலறையில் தவறி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 1942ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம்திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments