
மக்களின் பணம் மக்களுக்காகவே என்பது தான் நம்முடைய மாடல், முந்தைய அரசுகள் ஊழலில் திளைத்துப் போயிருந்தன என 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாறியுள்ளனர்- பிரதமர் மோடி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் வறுமை மறைந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.
மக்களின் பணம் மக்களுக்காகவே என்பது தான் நம்முடைய மாடல், முந்தைய அரசுகள் ஊழலில் திளைத்துப் போயிருந்தன. ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் வழங்குவதை தொடங்கினோம். சுமார் ரூ.40 லட்சம் கோடி, மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே காங்கிரஸ் அளித்தது. நாட்டின் நிலைமையை புரிந்துகொள்ள சிலருக்கு கடினமாக உள்ளது.
ஏழை மக்களின் நிலையை இந்த அரசு புரிந்துகொண்டு செயல்பட்டுவருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 14வது முறையாக இந்த அவையில் பதிலளிக்க வாய்ப்பு தந்த மக்களுக்கு நன்றி. நேற்றும், இன்றும் தீர்மானத்தின் மீது பல உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
பாராட்டுகளும், விமர்சனங்களும் இருந்தன. 4 கோடி வீடுகள், 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகளை கட்டியுள்ளோம். வெற்று வாக்குறுதிகளை கொடுக்கவில்லை. மக்களுக்கு உண்மையான வளர்ச்சியை கொடுத்துள்ளோம். தற்போது 2025ம் ஆண்டில் இருக்கிறோம். அதாவது 21ம் நூற்றாண்டில் 25% முடிந்துவிட்டது. அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவரின் உரை எடுத்துக்கூறியுள்ளது.
வீடு இல்லாத நான்கு கோடி பேர் வீடு பெற்றுள்ளனர். 5 ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குழாய்களில் குடிநீர் தரப்பட்டுள்ளது. மக்களின் தேவைகள் அறிந்து அவை பூர்த்தி செய்யப்படுகிறது. கள நிலவரத்தை அறிந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மாற்றம் உண்டாகிறது. சில தலைவர்கள் சொகுசு இல்லங்களில் வாழ்வதற்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள்” என்றார்.
0 Comments