Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த 27 பேர் கைது...!



நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை பொலிஸார் நேற்று (27) இரவு கைது செய்தனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று பிற்பகல் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இணை சுகாதார பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் நேற்று முதல் கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சுக்கு முன்பாக இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சிற்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வீதிகளை மறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

அந்த தடை இன்று மாலை வரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments