
கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை காலம் வழங்க ஐ. தே. க. தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபை தவிர்ந்த வேறு உள்ளூராட்சி சபைகளில் இரு தரப்பும் இணைந்து போட்டியிட தயாராக இருந்தால் அதற்கும் 20 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்க ஐ. தே. க. தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments