Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை - முழுமையான யுத்த நிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்தார் ரஸ்ய ஜனாதிபதி…!



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைகளின் போது உடனடி யுத்தநிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளார்.

உக்ரைன் சமீபத்தில் சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்ட ஒருமாதகால யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள புட்டின் வெளிநாடுகள் இராணுவ புலனாய்வு உதவிகளை உக்ரைனிற்கு வழங்குவதை நிறுத்தினால் மாத்திரம் முழுமையான யுத்த நிறுத்தம் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments