Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கிழக்கில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத குழு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது ; அமைச்சரவை பேச்சாளர்…!



கிழக்கு மாகாணத்தில் செயற்படும் முஸ்லிம் அடிப்படைவாத குழு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்;

அடிப்படைவாத குழு பற்றிய கூடுதல் விவரங்களை வெளிக்கொணரும் பணியில் காவல்துறை உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி சில தகவல்களை பாராளுமன்றத்தில் வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த குழுவின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என அவர் கூறினார்.

Post a Comment

0 Comments