
லொறியொன்றை திருடி தப்பிச் செல்ல முயற்சித்த நபர் மீது பொலிசார் கடுவலை நகரில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பல்பொருள் அங்காடிக்கு காய்கறிகளை ஏற்றி வந்த குளிரூட்டப்பட்ட லொறியொன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீதித் தடைகளை மீறி லொறி பயணித்த லொறியை பொலிசார் தடுக்க முயற்சித்தனர். எனினும் சாரதி லொறியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் லொறியிலிருந்து இறங்கி தப்பிக்க முயற்சித்த போது கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் களனி பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் என தெரியவந்துள்ளது.
0 Comments