
போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் மீட்சிக்கு உதவும் முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
“சிரிய மக்களுக்கு ஒரு புதிய, அமைதியான சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவ விரும்புகிறோம்,” என்று கலாஸ் பிரஸ்ஸல்ஸில் அமைச்சர்களுடனான சந்திப்புகளுக்குப் பிறகு X தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
டமாஸ்கஸ் மீதான தடைகளை நீக்குவதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை மாற்றம் வந்துள்ளது.
சிரியாவின் வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷைபானி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி தெரிவித்தார், இந்த முடிவு சிரியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
0 Comments