Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: தமிழரசுக் கட்சியிடம் சில உள்ளூராட்சி மன்றங்களின் பதவியைக் கோரிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...!



இலங்கை தமிழரசுக் கட்சியிடம் சில உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் பதவிகளை விட்டுத் தருமாறு தங்களது தரப்பு கேட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் அவர்களுக்கு ஆட்சியமைக்க ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்.

சில உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் பதவிகளை தங்களுக்கு விட்டுத்தருமாறு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஆராய்வதாக, இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளது.

எனவே, அவர்கள் வழங்கும் பதிலைப் பொறுத்து எதிர்கால முன்னெடுப்புகள் இடம்பெறும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments