
ஒருகொடவத்தை முதல் பொரளை வரையிலான பேஸ்லைன் பிரதான வீதி, அடுத்த வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 24 சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மே 25 ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணி வரை ஒருகொடவத்தை-பொரளை பிரதான வீதி மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வீதி போக்குவரத்துக்கு முற்றிலுமாக மூடப்படும் என்பதால், இந்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
0 Comments