
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (04) சந்தேகநபர்கள் மூவர் கொட்டாவ பொலிஸ் பிரிவின் மாக்கும்புர பல் போக்குவரத்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் 31, 32 மற்றும் 34 வயதுடைய கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாள்கள், கையடக்க தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று (05) காலை கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இளைஞன் ஒருவரை துப்பாக்கியால் சுடும் காட்சிகளின் CCTV காணொளி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
0 Comments