
மதுரு ஓயாவில் விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 8.17 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்விபத்தினையடுத்து விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
குறித்த உலங்குவானூர்தியில் விமான கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உட்பட 12 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
0 Comments