Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக இரத்து - டிரம்ப்...!



கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் உடனடியாக இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகுின்றார். குறிப்பாக வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் டிரம்ப் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடியை டிரம்ப் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறைவுக்குக் கொண்டு வருவதாகவும் அந்த நாட்டிற்கான புதிய வரிக் கட்டண விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல மாதங்களாக கனடாவுடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தருணம், கனடா டிஜிட்டல் சேவை வரியை அறிவித்ததைத் தொடர்ந்து இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது "எங்கள் நாட்டின் மீதான நேரடி மற்றும் அப்பட்டமான தாக்குதல்" என்றும் கூறியுள்ளார்.

"இந்த மோசமான வரியின் அடிப்படையில், கனடாவுடனான வர்த்தகம் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறைவுக்கு கொண்டுவருகிறோம்.

அடுத்த ஏழு நாட்களுக்குள் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய கனடா செலுத்த வேண்டிய கட்டணத்தை நாம் தெரியப்படுத்துவோம்," என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments